இலங்கை வாழ் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு இஸ்லாமிய சர்வதேச கூட்டமைப்பான ஓ.ஐ.சி வலியுறுத்தியுள்ளது.
சவுதியில் இடம்பெற்ற குறித்த அமைப்பின் 14வது மாநாட்டின் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலேயே இது வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த அமைப்பின் அங்கத்துவ நாடுகளின் தூதர்கள், உயர்ஸ்தானிகர்கள் கலந்து கொண்ட மாநாட்டிலேயே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அத்துடன் வன்முறையுடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் இலங்கை முஸ்லிம்கள் மீதான இனவாத தாக்குதல் பிராந்திய, சர்வதேச தாக்கங்களை ஏற்படுத்துவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment