கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து நடத்தப்படும் சிரியாவில் விமானத்தாக்குதல் அதிகரித்துள்ளது.
நாட்டின் வடமேற்கு பகுதியிலிருந்து அரசுக்கு எதிராக இயங்கும் போராளிகளைக் குறிவைத்து லாட்டானே மற்றும் கஃப்ர் ஸிடா ஆகிய பகுதிகளில் வான்வெளித் தாக்குதல் நடத்தப்பட்டது.
குண்டு வீச்சில் மக்கள் யாரும் கொல்லப்பட்டுள்ளனரா என்று கண்காணித்து வருவதாக சிரிய மனித உரிமை கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாத இறுதியிலிருந்து நடத்தப்பட்டு வரும் தொடர் தாக்குதலில் 229 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 727 பேர் காயமடைந்திருப்பதாகவும், 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment