கிழக்கு மாகாண ஆளுனராக ஷான் விஜயலால் டி சில்வா, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி முன்னிலையில் சற்று முன்னர் புதிய ஆளுராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
தென் மாகாண முன்னாள் முதலமைச்சரான ஷான் விஜயலால் டி சில்வா, கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டில் எழுந்த அழுத்தம் காரணமாக கிழக்கு மாகாண ஆளுநராக செயற்பட்ட ஹிஸ்புல்லாஹ் நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
இந்நிலையில் புதிய ஆளுராக ஷான் விஜயலால் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படலாம் என முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment