டாப்சி ஆன தமன்னா

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தேவி-2  படத்தில் நடித்த தமன்னா  தமிழில் உருவாகியுள்ள கொலையுதிர் காலம் படத்தின் ஹிந்தி பதிப்பான காமோஷியில் நடித்துள்ளார்.

இப் படம் வெளியீட்டுக்குத் தயாராகியுள்ள நிலையில் அடுத்தப்படியாக, தெலுங்கு படம் ஒன்றின் தமிழ் ரீ-மேக்கில் நடிக்கிறார். 

யாத்ரா இயக்குநர் மகி ராகவ் இயக்கத்தில் டாப்சி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற காமெடி கலந்த பேய் படம் ஆனந்தோ பிரம்மா.
இப்படம் தமிழில் வெளியாகிறது.

டாப்சி நடித்த வேடத்தில் நடிகை தமன்னா நடிக்கிறார். அதே கண்கள் படத்தை இயக்கிய ரோஹின் வெங்கடேஷ் தமிழில் இயக்குகிறார். மற்ற நடிகர்களுக்கான தேர்வு நடந்து வருகிறது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment