முஸ்லிம் வைத்தியர் என்பதற்காக ஷாபியை பழிவாங்க வேண்டாம் – ரிஷாட்

முஸ்லிம் வைத்தியர் என்ற காரணத்திற்காக குருநாகல் வைத்தியர் ஷாபியை பழிவாங்க வேண்டாமென முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தோடர்ந்தும் தெரிவித்த அவர், “குருநாகல் வைத்தியர் ஷாபி தொடர்பாக தற்போது பேசப்படுகின்றது. அவர் தவறு செய்திருந்தால் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது.

 ஆனால் நிதிக்குற்றம் தொடர்பாக அவரை கைது செய்துவிட்டு, அதன் பின்னர் ஊடகங்களில் இவரது சத்திர சிகிச்சை தொடர்பில் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் முறையிடுங்கள் என்று கோரப்படுகின்றது. 

நிதிக்குற்றம் குறித்து வைத்தியர் ஒருவரை கைது செய்து விட்டு அவர் மருத்துவத்தில் தவறு இழைத்துள்ளார் என அறிவிப்பதும் முறைப்படுங்கள் என ஊடகங்களின் மூலம் வேண்டுகோள் விடுப்பதும் எந்த நாட்டில் இருக்கின்றது என கேட்க விரும்புகின்றேன்.

வைத்தியர் ஷாபியால், இவ்வாறான தனியான சத்திர சிகிச்சை ஒன்றை ஒருபோதும் செய்ய முடியுமா? இவ்வாறான சத்திர சிகிச்சை ஒன்றில் சுமார் 12 பேர் சம்பந்தப்படுகின்றனர். 

அதுவும் மகப்பேற்று வைத்தியர் ஒருவரும் அறுவைசிகிச்சை வைத்தியர், அவருக்கு உதவியாக இன்னொரு வைத்தியர், மயக்க மருந்து வைத்தியர், தாதிகள் இருவர், அத்துடன் ஆண் பெண் என்ற இரு கண்காணிப்பாளர்கள், அத்துடன் அதி உயர் வெளிச்சம் கொண்ட பிரகாசமான ஒளித்திரையும் அந்த சத்திர சிகிச்சையின்போது சம்பந்தப்படுகின்றது. 

இந்த மருத்துவ நடைமுறையிலேயே ஷாபியினால் 8000 பேருக்கு இவர்கள் கூறும் சத்திர சிகிச்சையை தனித்து செய்ய முடியுமா?அவர் தவறு செய்திருந்தால் விசாரித்து உரிய முறையில் தண்டிப்பதை விடுத்து, முஸ்லிம் வைத்தியர் என்ற காரணத்திற்காக முழு முஸ்லிம் வைத்திய சமுதாயத்தையும் கேவலப்படுத்த வேண்டாமென வேண்டுகின்றேன்” என மேலும் தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment