செயற்கை சூரியனை உருவாக்கிய ஜேர்மனி ஆராய்ச்சியாளர்கள்

பூமிக்கு ஒளி வழங்கும்  சூரியனைப் போல் பத்தாயிரம் மடங்குக்கும் அதிக ஒளியை வழங்கும் செயற்கை சூரியனை உருவாக்கி அபார சாதனை படைத்துள்ளனர் ஜேர்மனி நாட்டு ஆராய்ச்சியாளர்கள். 

நாட்டின் கோலேன் நகரத்துக்கு அருகே உள்ள ஜூலிச் என்ற இடத்திலே இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. புரொஜெக்டர்களில் பயன்படுத்தப்படும் அதிக ஒளியை உமிழும் 147 பல்புகளை ஒரே நேரத்தில் ஒளிர வைத்து அதன் வெப்பத்தைக் கணக்கிட்டுள்ளனர்.

அது பூமியில் பகல் நேரத்தில் விழும் சூரியனின் ஒளியை விட பத்தாயிரம் மடங்கு அதிகமான உஷ்ணத்தை வெளிப்படுத்தியமை தெரிய வந்துள்ளது. 

3 ஆயிரத்து ஐநூறு சென்ட்டிகிரேட் வெப்பத்தை உமிழக்கூடிய செயற்கை சூரியனுக்கு ‘சின்லைட்’ எனப் பெயரிட்டுள்ளனர். ஒரே நேரத்தில் 3 ஆயிரத்து ஐநூறு சென்ட்டிகிரேட் வெப்பத்தை உமிழக்கூடிய இந்த செயற்கை சூரியனின் மூலம் சுற்றுச் சூழலுக்கு மாசு விளைவிக்காத, கரியமில வாயு கலப்பில்லாத, புதிய ரக எரிபொருளை கண்டுபிடிப்பதற்கான முன்முயற்சியாக இந்த ஆராய்ச்சி அமைந்துள்ளது. 

ஆனால், செயற்கை சூரிய ஒளியை உருவாக்கத் தேவைப்படும் மின்சாரம் நால்வர் கொண்ட ஒரு குடும்பம் ஒரு ஆண்டு முழுவதும் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு இணையானது என்பது குறிப்பிடத்தக்கது.



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment