இரத்தக்கண்ணீர் வடிக்கும் நாகம்மன்


வவுனியாவில் இரத்தக் கண்ணீர் வடிக்கும் அம்மனை பக்கதர்கள் சென்று தரிசித்து வருகின்றனர்.

வவுனியா சுந்தரபுரத்தில் அமைந்துள்ள புதூர் நாகபூசனி மற்றும் நாகதம்பிரான் ஆலயத்தில் உள்ள அம்மன் சிலையின் கண்களில் இருந்தே இரத்தக் கண்ணீர் வடிந்து வருகின்றது.

ஆலயத்தின் பூசகரான பெண் இன்று காலை ஆலயத்திற்குள் சென்று பார்த்தபோது அம்மன் சிலையிலிருந்து சிவப்பாக ஏதோ வடிவதை அவதானித்துள்ளார்.

உடனடியாக அதனைத் துடைத்த அவர் மீண்டும் அவ்வாறு கண்களிலிருந்து வருவதை அவதானித்த நிலையில் ஆலயத்தின் தொண்டர்களை அழைத்து சம்பவத்தைக் காட்டியுள்ளார்.

அதனைத் துடைத்துப் பார்த்தபோது மீண்டும் கண்களிலிருந்து இரத்தம் சிந்துவதை அவதானித்த அவர்கள் விசேட பூஜைகளை நடத்தினர்.

இந்தத் தகவல் கிராமம் முழுவதும் பிரவியது. இதனையடுத்து நூற்றுக்கணக்கான அடியவர்களும் அம்மனைத் தரிசிக்க வந்தவண்ணமுள்ளதுடன் அம்மனின் கண்களில் இருந்து இரத்தம் சிந்துவது ஏன் என்ற அச்சம் கிராமத்தவர்கள் மத்தியில் சூழ்ந்துள்ளது.

இதேபோல் கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன் களுத்துறையில் உள்ள மாதா சிலை ஒன்றிலிருந்தும் இரத்தக் கண்ணீர் சொரிந்தமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment