ஜேர்மனி நாட்டில் சூறாவளிக் காற்று வீசியதில் பல வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்துள்ளன.
போச்சோல்ட் டவுனில் நேற்று வீசிய பலத்த சூறைக்காற்று மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் வீசியது.
இதன்போது, வீடுகளின் மேற்கூரையில் இருந்த ஓடுகள் விழுந்து நொறுங்கின. வீட்டின் கண்ணாடிகளும் நொறுங்கி சேதமடைந்தன. வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார்களும் காற்றின் வேகத்தில் தூக்கி வீசப்பட்டன.
இந்த நிலையில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் தீயணைப்புத் துறையினர், இதுவரை 4 கார்கள் மற்றும் 6 வீடுகள் திடீர் சூறைக்காற்றில் சேதமடைந்ததாகவும், மீட்பு பணி நடந்து வருவதாகவும் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment