பிரச்சினைக்கு தீர்வு காண ஈரானுக்கு காலக்கெடு எதுவும் இல்லை – ட்ரம்ப்

பிரச்சினைக்கு தீர்வு காண ஈரானுக்கு காலக்கெடு எதுவும் இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டின் இடைநடுவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
‘பிரச்சினைக்கு தீர்வு காண ஈரானுக்கு காலக்கெடு எதுவும் இல்லை. நிறைய அவகாசம் இருக்கிறது. அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க தேவையில்லை.
ஈரான் விவகாரத்தில் கடந்த 3 நாட்களாக கூறி வருவது தான் எனது நிலைப்பாடு. அதில் எந்த மாற்றமும் இல்லை. அனைத்தும் சுமுகமாக முடியும் என்று நம்புகிறேன்’ என ட்ரம்ப் இதன்போது தெரிவித்துள்ளார்.
வல்லரசு நாடுகளுடன் ஈரான் ஏற்படுத்திய அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதால் இருநாடுகளுக்கும் இடையில் மோதல் உருவானது.
இந்த மோதல் நாளுக்கு நாள் முற்றி விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதன்காரணமாக இரு நாடுகளும் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment