பதவியிலிருந்து விலகிய மூன்று முஸ்லிம் அமைச்சர்களை மீண்டும் அமைச்சரவையில் இணைத்துக்கொள்வது குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறினேவுடன் ஐக்கிய தேசியக் கட்சி கலந்துரையாடவுள்ளது.
இந்த கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து இடம்பெறவுள்ளது.
அமைச்சரவையில் ஆராயப்பட வேண்டிய விடயங்கள் குறித்து ஆலோசனை நடத்தும் கூட்டம் நேற்று அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திலேயே மீண்டும் மூன்று முஸ்லிம் அமைச்சர்களை நியமிப்பது குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ஜனாதிபதி உடன்பட்டால் பதவி விலகிய முன்னாள் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ஹலீம் மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோரை மீண்டும் அமைச்சர்களாக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஆளுநர்கள் ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோருக்கு பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, அவர்களை பதவி விலகுமாறு வலியுறுத்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நாட்டில் முன்னெடுக்கப்பட்டன. இதனையடுத்து முஸ்லிம் தலைவர்கள் 9 பேர் தங்களது பதவிகளை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment