இராணுவத்தின் பிக்கப் ரக வாகனம் மோதியதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று மாலை வவுனியா, நெடுங்கேணியில் நடந்துள்ளது.
முல்லைத்தீவிலிருந்து புளியங்குளம் நோக்கி பயணித்த இராணுவ ஜீப் வாகனம் நெடுங்கேணி மகாவித்தியாலயம் அருகாமையில் உள்ள மஞ்சள் கோட்டு கடவைக்கு அருகில் பயணித்த துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் நெடுங்கேணி சேனைப்புலவைச் சேர்ந்த எஸ்.பேரம்பலம் (வயது 65) என்பவர் சம்பவ இடத்தில் சாவடைந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி பொலிஸார் முன்னெடுத்து, வருகின்றனர்.
0 comments:
Post a Comment