வவுனியாவில் பொலிஸ் தலைமையில் இப்தார் நிகழ்வு

வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் அமைந்துள்ள முஹிய்யித்தீன் ஜீம்மா பள்ளிவாசலில் இப்தார் நிகழ்வு வெகு சிறப்பாக இன்று  மாலை இடம்பெற்றது.

மதத்தலைவர்களின் ஆசியுடன் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகிந்த வில்லுவாராட்சி  தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.

இதில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.பி.மல்வலகே , வவுனியா நகரசபை உப நகரபிதா சு. குமாரசாமி , நகரசபை உறுப்பினர்கள் மற்றும் வவுனியா வர்த்தக சங்கச் செயலர் ஆ. அம்பிகைபாலன் , வர்த்தகர்கள் , கடற்படையினர் , பொலிஸார் , பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது உரையாற்றிய மாமடு விகாராதிபதி முவட்டகம ஆனந்த தேரர் பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகள் வவுனியா பூந்தோட்டத்தில்  தங்க வைக்கப்பட்டுள்ளமைக்கு  எதிர்ப்பினை  தெரிவித்திருந்தார்.


























Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment