யாழ்ப்பாணத்திற்கு ஒதுக்கிய எந்த நிதியும் திரும்பவில்லை!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தை பொறுத்த மட்டில் திட்டங்களிற்காக அனுமதிக்கப்பட்டு கிடைத்த நிதியினை எக் காரணம் கொண்டும் எம்மால் திருப்பி அனுப்பியது கிடையாது என்பதனை உறுதியாக தெரிவிக்க முடியும் என யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
அனுமதிக்கப்பட்ட திட்டங்களிற்காக திட்டத்தினை நிறைவேற்றாது நிதியை மீண்டும் கொழும்பிற்கே திரும்பிச் செல்லும் வகையில் மத்திய அரசின் நிர்வாகமே செயல்பட்டதாக வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் கடந்த வாரம் யாழ். நகரில் இடம்பெற்ற விசேட தேவையுடையோருக்கான கலந்துகொண்டு உரையாற்றும்போது குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் யாழ்ப்பாணத்திற்கு கொழும்பு அரசால் கடந்த காலத்தில் கிடைத்த நிதியில் இருந்து திரும்புச் சென்ற நிதி தொடர்பில் கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் யாழ். மாவட்டச் செயலாளர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,
யாழ்ப்பாணம் மாவட்டத்தை பொறுத்த மட்டில் எனது காலத்தில் திட்டங்களிற்காக அனுமதிக்கப்பட்டு கிடைத்த நிதியினை முழுமையாக பயன் படுத்மியுள்ளோம் . சில திட்டங்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் நிறைவேற்றி பின்னர் நிதி கிடைத.த சந்தர்ப்பங்களும் உண்டு . மாறாக எக் காரணம் கொண்டும் கிடைத்த நிதி எம்மால் திருப்பி அனுப்பியது கிடையாது .
இதேநேரம் 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் டிசம்பர் மாதங்களில் கிடைத்த நிதியினைக்கூட உடனடியாக பயன்படுத்தி அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளோம். இதேநேரம் 2018ஆம் ஆண்டில் கொழும்பு அமைச்சினால் பல திட்டங்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் அதிகமானவை மாகாண சபைக்கு உட்பட்ட அமைச்சுக்களிற்கு உட்பட்ட திணைக்களங்கள் என்பதனால் அந்த நிதி மாகாண சபையிடம் நேரடியாக கையளிக்கப்படாமல் அதற்கான செலவு மதிப்பீடுகள் தம்மால் தயாரித்து வழங்க முடியாது. எனவும் அது மத்திக்கும் மாகாணத்திற்குமான அதிகாரப் பகிர்வில் உள்ள பிரச்சணை என சர்ச்சை எழும்பியது.
இதன் காரணமாக ஒரு தொகை நிதி கிடைக்காமலேயே போன சந்தர்ப்பம் நிகழ்ந்தது. அதாவது அமைச்சர் மனோ கணேசனிடம் பலரும் விடுத்த கோரிக்கையின் பெயரில் எமக்கு கிடைக்கவிருந்த நிதியே இவ்வாறு கைநழுவிச் சென்றது. என்றார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment