டி.வி. தொடர்களின் தலைப்பை இந்திய மொழிகளிலும் காட்டுங்கள் - மத்திய அரசு

மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பல்வேறு இந்தி மற்றும் மாநில மொழி தனியார் செயற்கை கோள் டி.வி. சேனல்கள், தாங்கள் ஒளிபரப்பும் டி.வி. தொடர்களின் தலைப்பு, நடிகர்கள் பெயர், நன்றி அறிவிப்பு உள்ளிட்ட விவரங்களை ஆங்கிலத்தில் மட்டுமே காட்டுவதாக தெரிய வந்தது. 

இப்படி செய்வது, இந்தி மற்றும் மாநில மொழிகள் மட்டுமே தெரிந்த பொதுமக்கள், அந்த தொடர் குறித்த முக்கியமான தகவல்களை தெரிந்து கொள்ள விடாமல் தடுக்கிறது.

டி.வி. தொடர்களின் வீச்சை அதிகரிக்கவும், பார்வையாளர்களின் நலனுக்காகவும் எந்த மொழியில் தொடரோ, நிகழ்ச்சிகளோ ஒளிபரப்பாகிறதோ, அந்த மொழியிலும் அந்த விவரங்களை காட்ட வேண்டும். அந்தவகையில், இந்தி, மாநில மொழிகளில் காட்ட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில் ‘இந்திய மொழிகளை மேம்படுத்தும்வகையில், எந்த மொழியில் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகிறதோ, அந்த மொழியிலும் தகவல்களை காட்டுமாறு இந்த ஆணையை பிறப்பித்துள்ளோம். 

அவற்றுடன் ஆங்கிலத்திலும் காட்ட விரும்பினால், அதிலும் காட்டிக்கொள்ளலாம். நாங்கள் எதையும் தடுக்கவில்லை. இந்திய மொழிகளை சேர்த்துள்ளோம். அவ்வளவுதான். சினிமாவுக்காகவும் இதுபோன்ற ஆணைகளை பிறப்பித்துள்ளோம்’ என்றார்.


Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment