ஐ.பி.எல்., தொடரில் மீண்டும் 10 அணிகள்

ஐ.பி.எல்., தொடரில் மீண்டும் 10 அணிகள் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் போர்டால் (பி.சி.சி.ஐ.,) ஐ.பி.எல்., 'டுவென்டி-20' தொடர் நடத்தப்படுகிறது. தற்போது, சென்னை, மும்பை உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. இதன் எண்ணிக்கையை 10 ஆக உயர்த்தப்படலாம் எனத்தெரிகிறது. இது குறித்து லண்டனில் நடந்த கூட்டத்தில் அணி உரிமையாளர்கள், பங்குதாரர்கள் விவாதித்தனர். கடந்த 2011ல் 10 அணிகள் தொடரில் பங்கேற்றன. பின், கொச்சி (2012), புனே வாரியர்ஸ் (2013) அடுத்தடுத்த சீசனில் விலக, 2014ல் மீண்டும் எட்டு அணியாக மாறியது.
வாய்ப்பு அதிகம்
இது குறித்து அணி அதிகாரி ஒருவர் கூறுகையில்,'' அடுத்த ஐ.பி.எல்., சீசனில் 2 அணிகளை கூடுதலாக சேர்க்கும் எண்ணத்தில் உள்ளோம். இதற்கான, டெண்டர் வெளியிட வேண்டும். அடுத்த சீசனுக்குள் 10 அணிகளுக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது,'' என்றார்.
பி.சி.சி.ஐ., அதிகாரி ஒருவர் கூறுகையில்,'' முதலில் ஐ.பி.எல்., போட்டிகளை வெற்றிகரமாக நடத்துவதில்தான் கவனம் உள்ளது. புதிய அணிகளை சேர்க்க வேண்டும் என்றால், மைதானங்களின் பராமரிப்பு உள்ளிட்டவை குறித்து ஆராய வேண்டும். இப்படி பல விஷயங்களை தாண்டியபின்தான், அணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க முடியும்,'' என்றார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment