விறுவிறுப்பான போட்டிக்கு மத்தியில் உலக கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சம்பியனாக இங்கிலாந்து அணி தெரிவாகியது.
நியூஸிலாந்து அணியுடன் நேற்று (14) இடம்பெற்ற இறுதிப் போட்டி லண்டன் லோர்ட்ஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பொடுத்தாடி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 241 ஓட்டங்களைப் பெற்றதனால், போட்டி சமநிலையை அடைந்தது.
அதன் பின்னர் சூப்பர் ஓவர் அடிப்படையில் வெற்றியாளர்களை தெரிவு செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி சூப்பர் ஓவரில் 15 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணியும் ஒரு விக்கெட் இழப்புக்கு 15 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டதில் சூப்பர் ஓவரும் சமநிலையில் முடிந்தது.
சூப்பர் ஓவரில் சமநிலை கருத்தில் கொள்ளப்படுவதில்லையென்ற அடிப்படையில் இரு அணிகளும் அடித்த பவுண்டரிகளின் அடிப்படையில் இங்கிலாந்து அணி இப்போட்டியில் வெற்றி பெற்றதாக நடுவர்களினால் அறிவிக்கப்பட்டது.
4 ஆவது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்த இங்கிலாந்து அணி முதல் முறையாக தனது மண்ணிலேயே உலக கிண்ணத்தை தனதாக்கியமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment