தமிழகத்தில் 2 விபத்துகளில் 15 பேர் பலி

தமிழகத்தில் விழுப்புரம் மற்றும் தூத்துக்குடி அருகே நடந்த இரு விபத்துகளில் 15 பேர் பலியாயினர். 19 பேர் படுகாயம் அடைந்தனர்.
9 பேர் பலி:
கள்ளக்குறிச்சி அருகே ஏமப்பேரில் தனியார் பஸ் - வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. அதிகாலை 3 மணிக்கு நடந்த இவ்விபத்தில், சென்னையிலிருந்து காங்கேயம் நோக்கி சென்ற காரில் பயணித்த 7 பேரும், பஸ்சில் பயணித்த 2 பேரும் பலியாயினர். ஆம்னி பஸ் டிரைவர், ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள் 8 பேர் உட்பட 9 பேர் பலியாயினர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேன் கவிழ்ந்து 6 பேர் பலி :

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த திருத்தங்கல் கிராமத்திலிருந்து பயணிகள் வேன் ஒன்று திருச்செந்தூர் நோக்கி சென்றது. வேன் இன்று (ஜூலை 18) அதிகாலை 1.30 மணியளவில் திருநெல்வேலி - திருச்செந்தூர் ரோட்டில் கருங்குளம் என்ற இடத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த 6 பேர் பலியானார்கள். மேலும் 11 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் பலியானவர்கள்: ஜெகதீஸ்வரன், அருணாசலம், முத்துலட்சுமி, பாக்யலட்சுமி, நித்தீஷ், அனீஸ்பாண்டி (குழந்தை). விபத்தில் பலியானவர்கள் திருத்தங்கல் இந்திராநகர் பாண்டியன் நகர் 6வது தெருவை சேர்ந்தவர்கள் என போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி., அருண்பாலகோபாலன் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புபணியில் ஈடுபட்டார்
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment