பிலியந்தல, ஹெதிகம பகுதியில் 290 இலத்திரனியல் டெட்டனேட்டர்களுடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் டெட்டனேட்டர்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் இராணுவமும், பொலிஸாரும் இணைந்து நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த டெட்டனேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதன்போது வீட்டின் உரிமையாளர், அவருடைய இரு மகன்கள் மற்றும் டெட்டனேட்டர் எடுத்து வந்த நபர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பிலியந்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
0 comments:
Post a Comment