அமெரிக்காவில் தஞ்சம் புகச் சென்று கைதான, மூன்று இந்தியர்கள், தங்களை விடுவிக்க வலியுறுத்தி, தொடர் உண்ணாவிரதம் இருந்ததால், அவர்களது உடல்நிலை மோசமடைந்தது.
இதையடுத்து, கட்டாயப்படுத்தி, ஊசி மூலம், அவர்களுக்கு, 'குளுக்கோஸ்' செலுத்தப்பட்டது.உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும், ஏராளமானோர், அமெரிக்காவுக்கு, சட்டவிரோதமாக தஞ்சம் பெற முயற்சிக்கின்றனர்.
இவர்களை, அமெரிக்க அதிகாரிகள் கைது செய்து, தடுப்பு சிறைகளில் வைத்துள்ளனர்.இந்நிலையில், டெக்சாஸ் மாகாண எல்லையில் கைதான மூன்று இந்தியர்கள், அங்குள்ள, எல் பசோ தடுப்பு முகாமில், ஒரு ஆண்டுக்கும் மேலாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
தங்களை விடுவிக்கும்படியும், தங்கள் மீதான வழக்குகளை, வெளியில் இருந்த சந்திக்க அனுமதி கோரியும், இவர்கள் மூன்று பேரும், தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களது உண்ணா விரதம், நேற்று, 20வது நாளை தொட்டது. அவர்களது உடல்நிலை மோசம்அடைந்ததை அடுத்து, அவர்களுக்கு வலுக்கட்டாயமாக, ஊசி மூலம், கைகளில் குளுகோஸ் செலுத்தப்பட்டது.
இதை, அமெரிக்காவைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் கடுமையாக எதிர்த்து உள்ளன. அடுத்த கட்டமாக, மூன்று பேருக்கும், கட்டாயமாக உணவு அளிக்கப்படலாம் என, தகவல் வெளியாகி உள்ளது.கைதான இந்தியர்கள் குறித்த விபரங்கள், வெளியிடப்படவில்லை.
0 comments:
Post a Comment