ஊசி மருந்து ஏத்திய 50 பேருக்கு நோய்தொற்று

இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ஊசி மருந்து செலுத்தப்பட்ட நோயாளிகளுக்கு குளிர் காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியாளர் வீரராகவ ராவ், அந்த மருந்தை ஆய்வுக்கு அனுப்ப உத்தரவிட்டார்.

ஆண்கள் பொதுப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 50 நோயாளிகளுக்கு நேற்று மாலை தொற்று பரவாதிருக்க ஆன்டி பயோடிக் ஊசி போடப்பட்டது. இதையடுத்து அனைவருக்கும் ஒரே விதமான பாதிப்புகள் தென்பட்டதையடுத்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்தனர்.

தகவல் அறிந்து வந்த மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ்,மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார். மருந்துகளின் தன்மையை கேட்டறிந்து, பாதிக்கப்பட்ட நோயாளிகளையும் சந்தித்துப் பேசினார்.

புதிய மருந்தை மருத்துவமனையில் பயன்படுத்தியதால் இந்த பாதிப்பு ஏற்பட்டதாக அறிந்து அந்த மருந்தை ஆய்வுக்கு அனுப்பி வைத்தார். இப் பிரச்சினையால் பொதுமக்கள் அச்சம் அடையத் தேவையில்லை என்றும் வீரராகவ ராவ் தெரிவித்தார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment