பொது வேட்பாளரை களமிறக்குவதற்கு முன்னர் நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய பரந்த அரசியல் கூட்டணி அமைக்கப்பட்டு, அக்கூட்டணியின் அரசியல், பொருளாதார, சமூக வேலைத்திட்டங்கள் மற்றும் அதனை செயன்முறைப்படுத்துவதற்கான தலைமைத்துவக் குழு என்பவற்றை நாட்டுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இந்த வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டதன் பின்னர் அதற்குப் பொருத்தமான பொது வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டின் தலைவரை தீர்மானிப்பது அரசியல் கட்சிகளின் தலைவர் அல்லவெனவும், நாட்டிலுள்ள எந்தக் கட்சியிலும் சம்பந்தப்படாத 50 லட்சம் படித்த நடுத்தர சிந்தனையுள்ளவர்கள் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், ஒவ்வொரு கட்சிகளும் வேட்பாளர்களை முன்வைப்பதனை விடவும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய விடயம், இந்த 50 லட்சம் மக்களுக்குத் தேவையான செயற்திட்டத்தினையும், அதனை செயற்படுத்தும் தலைவர் யார் என்பதையும் தீர்மானிப்பதாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
காலி கோட்டையில் நடைபெற்ற காலி மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment