காணி அனுமதிப் பத்திரமுள்ளவர்களுக்கு உறுதிப்பத்திரம் வழங்க திட்டம்

நாடளாவிய ரீதியில் அரச காணிகளில் அனுமதிப் பத்திரங்களுடன் வசிக்கும் மக்களுக்கு காணி உரிமைப் பத்திரத்தை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அது தொடர்பான சட்ட மூலம் ஒன்றைப் பாராளுமன்றத்தில்  சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல சமர்ப்பித்துள்ளார்.
இச் சட்டமூலம் முழு நாட்டிற்கும் உரிய வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1920களில் இருந்து அரச காணிகளில் வசிப்பவர்கள் காணி உரிமை பத்திரமின்றி அனுமதி பத்திரங்களையே வைத்துள்ளனர்.  இவர்களுக்கு வங்கிக் கடன்களைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை உள்ளது.
மேற்படி காணிகளைத் தமது பிள்ளைகளுக்கும் பெற்றுக் கொடுக்க முடியாத நிலை உள்ளது. அவ்வாறானவர்களுக்கு அக்காணிகளுக்கான காணி உரிமைப் பத்திரங்களை வழங்குவது இச்சட்டத்தின் நோக்கமாகும்.
25 இலட்சம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் கிரியெல்ல மேலும் கூறியுள்ளார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment