எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேட்பாளராக போட்டியிடுவாராயின் தமிழ் மக்கள் அவருக்கு ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டார்களென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் சுமந்திரன் கூறியுள்ளதாவது,
“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவாராயின் அவர் வெற்றியடைய மாட்டார் என்பதை அனைவரும் அறிவார்கள்.
மேலும் ஒரு தடவை மாத்திரமே ஜனாதிபதியாக இருப்பேன் எனவும் ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வதாகவும் மைத்திரிபால சிறிசேன கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்களுக்கு வாக்குறுதியளித்துள்ளார்.
இந்நிலையில் மீண்டும் என்னை ஜனாதிபதியாக தெரிவு செய்யுங்களென மக்களிடம் சென்று கோரினால், எங்களது மக்கள் ஒருபோதும் அவருக்கு ஆதரவு வழங்கமாட்டார்கள்” என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment