நேரடி விவாதத்துக்கு வருமாறு பைஸர் முஸ்தபாவுக்கு நிஸ்ஸங்க சேனாதிபதி அழைப்பு

பாதுகாப்பு அமைச்சுக்கு திருட்டுத்தனமாக கடிதம் கொடுத்து சட்ட விரோத ஆயுத வியாபாரத்தில் ஈடுபட்டதாக தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு பொய்யானது எனவும், என்மீது சேறு பூசும் ஒரு நடவடிக்கையே இதுவாகும் என பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
ஆயுத கொடுக்கல் வாங்கலின் போது மோசடியில் ஈடுபடவில்லையென கூறுவதாயின் தன்னுடன் பகிரங்க விவாதம் ஒன்றுக்கு வருமாறு எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபாவுக்கு சவால் விடுத்துள்ளார்.
இது குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே பைஸர் முஸ்தபா எம்.பி. இவ்வாறு கூறியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சு தேவையானால் இது தொடர்பில் எந்தவொரு விசாரணையையும் நடாத்தட்டும். எந்தவொரு ஆயுத கொடுக்கல் வாங்கலுடனும் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லையென பொறுப்புடன் கூறுகின்றேன்.
சட்ட விரோத ஆயுத கொடுக்கல் வாங்கல் தொடர்பில் தன்னிடம் ஆவணங்கள் இருப்பதாக நிஸ்ஸங்க சேனாதிபதி கூறியுள்ளார். அவ்வாறு இருந்தால் அதனை உரிய இடங்களுக்கு ஒப்படைக்குமாறும் பைஸர் முஸ்தபா மேலும் குறிப்பிட்டார். 
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment