இளையராஜாவையும், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தையும் பெரும்பாடு பட்டு சேர்த்து வைத்ததாக இசையமைப்பாளர் தீனா தெரிவித்துள்ளார்.
சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் ”உயிரின் உயிர் பாட்டு” என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இசைத் தொகுப்பு அறிமுக விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய தென்னிந்திய இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தீனா, நீர் சேமிப்பை மையமாக வைத்து, இந்த இசை தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.
மேலும் தென்னிந்திய இசை கலைஞர்கள் சங்க கட்டிடம் கட்டுவதற்கு இசையமைப்பாளர் இளையராஜா, 6 கோடி ரூபாய் நிதி உதவி அளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment