கார்கில் பகுதியில் பல்வேறு கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு

கார்கில் போர் வெற்றியின் 20வது ஆண்டு வெற்றி தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு கார்கில் பகுதியில் டிராஸ் என்ற இடத்தில் அமைந்துள்ள போர் நினைவிடத்தில் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு நடக்கும் நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறார். முப்படைகளின் தளபதிகளும் கலந்து கொள்கின்றனர். மேலும் ராணுவ வீரர்களின் சாகச நிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளன.
கடந்த 14 ஆம் தேதி கார்கில் வெற்றி ஜோதியை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் டெல்லியில் ஏற்றி வைத்தார். 9 நகரங்களின் வழியாக எடுத்து வரப்பட்ட அந்த ஜோதி இன்று ராணுவ தளபதியிடம் ஒப்படைக்கப்படுகிறது. பின்னர் போர் நினைவிடத்தில் உள்ள ஜோதியுடன் இணைக்கப்படுகிறது. கடந்த 1999ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம் நாள் கார்கில் பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் தீவிரவாதிகளை வெற்றிகரமாக இந்திய ராணுவம் விரட்டியடித்தது. போர் முடிந்ததாக கருதப்படும் ஜூலை 26 ஆம் தேதி கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment