நீட் தேர்வுக்குப் பதிலாக நெக்ஸ்ட் என்ற பெயரில் தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளமைக்கு புதுச்சேரி முதல்வர் நராயணசாமி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை வளாகத்தில் இடம்பெற் செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் இந்த எதிர்ப்பினை வெளியிட்டார்.
அவர் தெரிவிக்கையில், “மத்திய அரசின் நீட் தேர்வானது மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவோடு இருந்த புதுச்சேரி மாணவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. எனவே நீட் தேர்வை இரத்துச் செய்ய வேண்டும் என்று சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமல்லாது பலகட்டப் போராட்டங்களையும் நடத்தியுள்ளோம்.
ஆனால், மத்திய அரசானது தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் நீட் தேர்வை இரத்து செய்வதற்கான எவ்வித முகாந்திரமும் இல்லாமல் காலம் தாழ்த்தி வருகிறது.
இதனிடையே, மருத்துவப் படிப்பில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் நெக்ஸ்ட் தேர்வு எழுத வேண்டும் என சட்டத்தில் ஒரு வரைபைப் புகுத்தியுள்ளார்கள்.
நான்கரை ஆண்டுகாலம் மருத்துவம் படித்துவிட்டு மத்திய அரசின் தேர்வில் பங்கேற்க வேண்டும் என்று கூறினால், நாட்டில் பல்கலைக் கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் தேவையில்லை. அனைத்து அதிகாரங்களும் தேசிய மருத்துவ ஆணையத்திடம் சென்று விடுகிறது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. இது ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய பேரிழப்பாகும்.
மக்கள் மத்தியில் படிப்படியாக மருத்துவப் படிப்புக்கான தகுதியை நிர்ணயம் செய்வதும், மருத்துவம் படித்துவிட்டு வேலைக்குச் செல்லும்போது, அவர்களின் இறுதியாண்டுத் தேர்வை மத்திய அரசே நடத்த வேண்டும் என்பதும் மாநில மற்றும் மாணவர்களின் உரிமையைப் பறிக்கின்ற செயலாகும். எனவே இதனை முழுமையாக எதிர்க்கிறோம்” என அவர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment