திருமண வீட்டுக்கு போனவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

வட­மேற்கு பங்­க­ளா­தேஷில் திரு­மண வைபத்­தி­லி­ருந்து வீட்­டிற்குத் திரும்பிக் கொண்­டி­ருந்­த­வர்­களை ஏற்றிச் சென்ற வேனொன்று புகை­யி­ர­தத்தால் மோதுண்டு விபத்­துக்­குள்­ளா­னதில் மண­மகன் மற்றும் மண­மகள் உட்­பட குறைந்­தது 10 பேர் பலி­யா­கி­யுள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­தி கள் தெரி­விக்­கின்­றன.
தலை­ந­க­ரி­லி­ருந்து சுமார் 145 கிலோ­மீற்றர் தொலை­வி­லுள்ள உலஹ்­பரா பிராந்­தி­யத் தில் பாது­காப்­பற்ற புகை­யி­ரதக் கட­வை­யொன்றை அந்த வேன் கடக்க முயற்­சித்த போது டாக்கா நகரை நோக்கிப் பய­ணித்த புகை­யி­ர­தத்தால் மோதுண்டு விபத்­துக்­குள்­ளா­ன­தாக பிராந்­திய அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர். விபத்து இடம்­பெற்ற போது அந்த வேனில் 14 பேர் இருந்­துள்­ளனர்.இந்த விபத்தில் மண­மகன் மற்றும் மண­மகள் உட்­பட 8 பேர் சம்­பவ இடத்­தி­லேயும் இருவர் மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பல­ன­ளிக்­காத நிலை­யிலும் உயி­ரி­ழந்­துள்­ளனர்.
பங்­க­ளா­தேஷில் பாது­காப்­பற்ற புகை­யி­ரதக் கட­வைகள் கார­ண­மாக புகை­யி­ரத விபத்­துகள் இடம்­பெ­று­வது வழ­மை­யா­க­வுள்­ளது. அந்­நாட்­டி­லுள்ள சுமார் 2,500 புகை­யி­ரதக் கட­வை­களில் சுமார் 40 சத­வீ­த­மா­னவை பாது­காப்­பற்­ற­வை­யாகும்.
கடந்த ஆறரை வருட காலப் பகு­தியில் அந்நாட்டின் 2,800 கிலோமீற்றர் புகையிரதப் பாதை வலைப்பின்னலில் இடம்பெற்ற விபத்துகளில் சுமார் 6,000 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரி விக்கின்றனர்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment