சுண்டுக்குழியில் இடித்தழிக்கப்பட்ட ஆலயம்

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் அமைந்துள்ள  பழமையான இந்து ஆலயம் ஒன்று இடித்து அழிக்கப்பட்டிருப்பதுடன், ஆலயத்திலிருந்த விக்கிரகமும் எடுத்து செல்லப்பட்டிருக்கின்றது. 

 குறித்த பகுதியிலுள்ள ஸ்ரீ ஞான வைரவா் ஆலயம் மிக நீண்டகாலமாக அப் பகுதி மக்களால் வழிபடப்பட்டு,பராமாிக்கப்பட்டு வந்தது. 

இந்த நிலையில் குறித்த ஆலயத்தை உருவாக்கியவாின் பிள்ளைகளுக்கிடையில் தொடா்ச்சியான முரண்பாடு இருந்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து நேற்று நள்ளிரவு ஆலயத்திற்குள் நுழைந்த சிலா் ஆலய கட்டடத்தை இடித்து தரைமட்டமாக்கியதுடன், விக்கிரகங்களையும் எடுத்துச் சென்றுள்ளனா். 

இதனையடுத்து, ஆலயத்தை நிா்வகித்துவந்த சிலரும், பொதுமக்களும் இணைந்து யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருக்கின்றனா்.  

இது குறித்து அவா்களை தொடா்பு கொண்டு கேட்டபோது, 

ஆலயத்தை உருவாக்கியவாின் பிள்ளைகளுக்கிடையிலான சில முரண்பாடுகளாலேயே ஆலயம் உடைக்கப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்திய அவா், அந்த ஆலயம் மிகப் பழமையான ஆலயம் என்றார்.

பெருமளவு மக்களால் வழிபடப்பட்டு வந்த நிலையில் இவ்வாறான துரதிஷ்ட்டவசமான சம்பவம் இடம்பெற்றுள்ளதெனக் குறிப்பிட்ட அவர் குறித்த சம்பவத்தை சிவசேனை அமைப்பின் தலைவா் மறவன்புலவு சச்சிதானந்தம் பாா்வையிட்டுள்ளாா் என்றும் தெரிவித்தார்.

இந்த ஆலயத்திற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் மாவை சேனாதிராஜா இந்த ஆண்டு ஒரு தொகை பணத்தை ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுவேளை ஆலயம் இடிக்கப்பட்டமை தொடா்பாக பொலிஸாா் விசாரணைகளை  முன்னெடுத்துள்ளனர்.
Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment