தமிழர்களுக்கு அதிகபட்ச அதிகாரப் பகிர்வு வேண்டும் - சம்பந்தன்

அதிகபட்ச அதிகாரப் பகிர்வு தமிழர்களுக்கு வழங்கப்படவேண்டும். எமது மக்களை நீங்கள் தொடர்ந்து ஏமாற்ற முடியாது. இனிமேல் ஏமாறவும் எமது மக்கள் தயாரில்லை. இவ்வாறு நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

விடயம் தொடர்பில் அவர் தெரிவித்ததாவது,
  
விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டு 10 வருடங்கள் கடந்தும் இதுவரைத் தமிழருக்கு ஓர் அரசியல் தீர்வு இல்லை. தமிழர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப்படுகின்றனர். சர்வதேச சமூகம் ஒரு பார்வையாளராக மட்டும் இருந்துவிட முடியாது.

விடுதலைப்புலிகளைத் தோற்கடிக்க உதவியது சர்வதேச சமூகம். இதனால் பாதிக்கப்பட்டது தமிழ் மக்களே. தமிழருக்குப் பாரதூரமான அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சமூகம் அரசியல், இராஜதந்திர, பொருளாதார ரீதியாக இலங்கை அரசுக்கு அழுத்தத்தை வழங்க வேண்டும்.

சுதந்திரத்திற்கு முன்னர் தமிழர்கள் பிரிவினையை விரும்பியிருக்கவில்லை. நாட்டைப் பல வழிகளில் பிரிப்பது நாட்டுக்கோ அல்லது தமிழருக்கோ நன்மையில்லை. அதுதான் சமஷ்டிக் கட்சியின் கொள்கை.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வே தமிழர்களின் விருப்பமாகும். நாடு சக்திமிக்க ஒன்றாக மாற வேண்டுமானால் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும்.

சிங்கள பௌத்த மயமாக்கல் வடக்கு கிழக்கில் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதால்தான் தமிழர் பிரச்சினை தீர்வு தாமதமாகின்றதா என்று தமிழ் மக்களும் நாங்களும் அச்சம் கொண்டுள்ளோம். இது சூட்சுமமாக முன்னெடுக்கப்படுகின்றது.

எல்.எல்.ஆர்.சி. அறிக்கையின் சிபாரிசுகளை நிறைவேற்றுங்கள். சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசமைப்பை வைத்துக் கொண்டு நீங்கள் ஆட்சி செய்தால் அது தவறு. 

அப்படிச் செய்தால் நீங்கள் தோல்வியடைந்த அரசாக செல்லுபடியற்ற அரசாக ஆகிவிடுவீர்கள். எனவே, உச்சபட்ச அதிகாரப்பகிர்வு தமிழர்களுக்கு வழங்கப்படவேண்டும். எமது மக்களை நீங்கள் தொடர்ந்து ஏமாற்ற முடியாது –என்றார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment