ஒரே நாளில் நடந்த மூன்று குண்டு வெடிப்புச் சம்பவங்களில், பன்னிருவர் பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபுல் பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
அரச ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, தலைநகர் காபுல் வந்தபோது திடீரென வெடித்துச் சிதறியது. இதில் அரசு ஊழியர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.
குறித்த பகுதியில் மீட்புப் பணி நடந்த நிலையில், அங்கு வந்த ஒருவன் தற்கொலை படைத் தாக்குதல் நடத்தினான். இந்த இரு சம்பவங்களும் ஓய்வதற்குள், காபுல் நோக்கிச் சென்ற கார் ஒன்றும் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது.
ஒரே நாளில் நடந்த இந்தக் கோர சம்பவங்களில், 5 அரசு ஊழியர்கள் உட்பட மொத்தம் 12 பேர் உயிரிழந்தனர். 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த தாக்குதல்களுக்கு தீவிரவாத அமைப்பு எதுவும் இதுவரை பொறுப்பேற்காத நிலையில், பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணையை முடுக்கி விட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment