ஸ்பெயின் கடற்கரையில் நிறுத்தப்பட்ட கப்பல்

ஈரானின் எண்ணெயை சுமந்து சென்ற கப்பல், ஸ்பெயின் கடற்கரையில் நிறுத்தப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரத் தடைகளை மீறி சிரியாவிற்கு கச்சா எண்ணெயைக் கொண்டு செல்லும் டேங்கர், கிப்ரால்டரில் நிறுத்தப்பட்டது. அமெரிக்காவின் வேண்டுகோளின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஸ்பெயின் கூறுகிறது.
"சட்டவிரோத நடவடிக்கையை" குறித்து விளக்கமளிக்க டேரான் என்ற இடத்தில் ஆஜர் ஆகுமாறு பிரிட்டிஷ் தூதருக்கு ஈரான் கட்டளையிட்டுள்ளது.
"மிகவும் கடுமையாக மற்றும் வெளிப்படையாக ஐரோப்பிய யூனியன் இப்படிப்பட்ட காரியத்தை செய்தது இதுவே முதல்முறை" என்று சர்வதேச வழக்கறிஞர் மேத்தியு ஒரேஸ்மன் தெரிவித்துள்ளார்.
அந்த டேங்கர் கப்பல் சீரியாவிற்கு எண்ணெய் கொண்டு சென்ற கப்பல்தான் என்று கிப்ரல்டார் அரசாங்கம் கூறியுள்ளது.  
இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் மேலும் நடைபெற்று வரும் நிலையில், ஈரான், ஐரோப்பிய ஐக்கியம் மற்றும் அமேரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையே இனி எப்படிப்பட்ட நட்பு இருக்கும் என்பது தெரியவில்லை.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment