இந்தியாவின் மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த கட்டிடத்தில் அரசு நடத்தும் தொலைதொடர்பு நிறுவனமான எம்.டி.என்.எல் செயல்பட்டு வருகின்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
கட்டிடத்தின் மொட்டை மாடியில் சுமார் 100 பேர் சிக்கியுள்ள நிலையில் 14 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
ஒன்பது மாடி கட்டிடத்தில் பரவிய தீ 3 மற்றும் 4 வது மாடி வரை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தீவிபத்து தொடர்பில் இதுவரை யாரும் காயமடைந்ததாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
0 comments:
Post a Comment