பாலிவுட் நடிகர் அக்சய் குமார். நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள படம் 'மிஷன் மங்கள்'. இந்தியாவின் மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதை மையமாக வைத்து இந்த படம் தயாராகி வருகிறது.. ராகேஷ் தவான் என்கிற விஞ்ஞானியாக நடிக்கிறார் அக்சய் குமார். இந்த படத்தில் வித்யாபாலன், நித்யாமேனன், டாப்ஸி, சோனாக்சி சின்கா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை ஜெகன் ஷக்தி என்பவர் இயக்கியுள்ளார்.
இந்தப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இயக்குனர் ஜெகன் சக்தி சமீபத்தில் மலையாள மீடியா ஒன்றிற்கு அளித்த பேட்டியின்போது இந்த படம் குறித்த சில சுவாரசியமான தகவல்களை வெளியிட்டுள்ளார். முதன்முதலில் இந்த கதையை உருவாக்கியபோது இதில் மோகன்லால் கதாநாயகனாகவும் வித்யாபாலன் நடிக்கும் கேரக்டர் ஸ்ரீதேவியையும் தான் நடிக்க வைப்பதாக முடிவு செய்திருந்தாராம்.
0 comments:
Post a Comment