அத்திவரதர் தரிசனம் : நெரிசலில் சிக்கி 27 பேருக்கு மயக்கம்

காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியதில் நெரிசலில் சிக்கி, 27 பேர் மயக்கம் அடைந்தனர்.


காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசனம் செய்ய தினந்தோறும் பக்தர்கள் லட்சக்கணக்கில் கூடுகின்றனர். கூட்டத்தை சமாளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறும் நிலையே உருவாகுகிறது. இதுவரை கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பாதிப்படைந்துள்ளனர். தொடர்ந்து வரதராஜ பெருமாள் கோயிலில் பக்தர்கள் மட்டுமின்றி முக்கிய தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களும் வருகை தருவதால் கூட்ட நெரிசலால் தரிசன நேரம் அதிகரிக்கப்படுகிறது.


பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலர் சத்யபிரகாஷ், நேற்று, அத்தி வரதரை தரிசனம் செய்தார். பிரதமர் நரேந்திர மோடி, வருகைக்கான, முன்னேற்பாடாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அத்தி வரதர் தரிசனத்திற்காக, வி.ஐ.பி.,க்கள், 'டோனர்' பாசில் செல்பவர்கள், ஆனைக்கட்டி தெருவில், நேற்று முதல் செல்ல, வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாரத பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலர், சத்யபிரகாஷ், நேற்று காலை, அத்தி வரதரை தரிசனம் செய்வதற்கு கோவிலுக்குச் சென்றார். இதனால், பிரதமர் வருவதற்கான முன்னேற்பாடாக இருக்கலாம்.
மேலும், அடுத்த மாதம் இரண்டாது வாரம், பிரதமர் மோடி வரலாம் என, கூறப்படுகிறது. பொது தரிசனத்தில் சென்ற பக்தர்கள், கூட்ட நெரிசலில் சிக்கி, நேற்று(ஜூலை27) ம் தேதி 27 பேர் மயக்கமுற்றனர். அவர்கள், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வடக்கு மாட வீதி திரும்பும் வழியில், சேறும் சகதியுமாக இருந்ததால், அந்த வழியாக கோவிலுக்குச் சென்ற பக்தர்கள், பெரும் அவதிக்குள்ளாகினர்.அதே போல், கோவிலுக்குச் சென்ற மக்கள், திரும்பி வந்து, ரங்கசாமி குளம் சந்திப்பில் தான் பஸ் நிலையம் செல்ல வேண்டும். அதே போல், உள்ளூர் மக்கள், இருசக்கர வாகனங்களில்கூட, ரங்கசாமி குளத்தை தாண்டிச் செல்ல போலீசார்அனுமதிக்கவில்லை. அந்த இடத்தில், ஏற்கனவே வைக்கப்பட்ட தற்காலிக கழிப்பறை அகற்றப்பட்டதால், வெளியூர் மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.அந்த இடத்தில், மீண்டும் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விரைவு தரிசனம்


அத்திவரதர் சேவையை காண தினந்தோறும் பக்தர்கள் கூடுவார்கள் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் பக்தர்கள் அவதிக்குள்ளாகி வருவதையும் காண முடிகிறது. சில நாட்களுக்கு முன் (குறிப்பாக சனிக்கிழமை) உட்பட சில நாட்களில் அத்திவரதரை காண கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. பக்தர்கள் சிலர் இரண்டு மணி நேரத்தில் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.நேரம் நீட்டிப்பு


அத்திவரதரின் தரிசனத்தை காண நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவிலில் பக்தர்கள் நெரிசலை குறைக்க மாவட்ட நிர்வாகமும் கோவில் நிர்வாகமும் அத்திவரதர் தரிசன நேரத்தை நள்ளிரவு வரை நீடித்தது. நேற்று நள்ளிரவிலும் ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment