முந்திரிகாட்டில் ஆணவக் கொலை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சி.மகேந்திரன் மகன் புகழ், ஹீரோவாக அறிமுகமாகும் படம் முந்திரிக்காடு. இதில் சுபப்ரியா, சீமான், ஜெயராவ் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஏ.கே.பிரியன் இசை அமைக்கிறார், ஜி.ஏ.சிவசுந்தர் ஒளிப்பதிவு செய்கிறார். மு.களஞ்சியம் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது:

தீண்டாமையை தீவிரமாகக் கடைப்பிடிக்கும் தட்டாங்காடு என்கிற கிராமத்தில் நடந்த ஒரு கொடூரமான கொலை சம்பம், அந்த சரகத்தில் பணிபுரிந்த காவல்துறை ஆய்வாளர் அன்பரசனை மன ரீதியாக பாதிக்கிறது. அதாவது அந்த ஊரை சேர்ந்த ஒரு ஆதிக்க சாதி ஆணும், தாழ்த்தப்பட்ட பெண்ணும் காதலிக்கின்றனர். அந்த தாழ்த்தப்பட்ட பெண்ணை, உள்ளூர் சாதி வெறியர்கள் ஒன்பது பேர் சேர்ந்து கொலை செய்து விடுகின்றனர்.

வலுவான சாதிய அரசியல் பின்னணி இருப்பதால் கொலையாளிகளை சட்டம் எதுவும் செய்ய இயலாமல் தலைகவிழ்ந்து நிற்கிறது. ஆனால், சட்டப்படி அவர்களை எப்படியாவது தண்டித்து விட வேண்டும் என்று அன்பரசன் கடுமையாக போராடிக்கொண்டு இருக்கும் போது, அடுத்து அதே ஊரில் இன்னொரு காதல் உருவாவது கண்டு அதிர்ச்சியடைகிறார்.

தன் காதலை அழிக்க நினைக்கிற சாதி வெறிக் கும்பலை எதிர்த்து, உயிரையும் பணயம் வைத்து போராடுகிறாள் தெய்வம்என்ற பெயர் கொண்ட நாயகி. அவள் ஒரு போதும் காதலை கைவிட மாட்டாள். என்று முடிவுக்கு வந்த கிராம மக்கள் தெய்வத்தைக் கொன்று விட தீர்மானிக்கிறார்கள். அதுவும் அவள் தந்தை கையாலேயே கொல்ல முடிவெடுக்கிறார்கள். காவல்துறை ஆய்வாளர் அன்பரசன், எப்படியாவது தெய்வத்தை காப்பாற்றி, செல்ல முத்துவோடு வாழவைத்து விட வேண்டும் என்று நினைக்கிறார். வென்றது சாதி வெறிபிடித்த மக்களா, அன்பரசனா என்பது கதை. என்றார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment