கமல் சரவணன் மீது சின்மயி தாக்கு

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக விறுவிறுப்பாக சென்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் சனிக்கிழமை சேரன் மீது மீரா மிதுன் கூறிய பொய் புகார் பற்றிய பிரச்சனை விவாதத்துக்கு வந்தது. அப்போது கமல் பேச்சுவாக்கில், பேருந்தில் செல்லும்போது நாள்தோறும் நெரிசலில் வேறுவழியின்றி பெண்கள் மேல் பலர் உரச வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.. அவர்களை தவறாக நினைக்க முடியுமா என்று கேட்டார்.. மேலும் உரசுவதற்கு என்றே சில பேர் வருவார்கள் என கமல் கூறியதும் உடனே நடிகர் சரவணன் தனது கைகளை உயர்த்தி ஆமோதித்தார்.

உடனே கமல், “பார்த்தீர்களா அப்படிப்பட்ட ஆட்களை புடிச்சு நாலு போடு போட்டுருப்பார் போல இருக்கிறது” எனக்கூற, சரவணனோ இல்லை சார் நானே கல்லூரி செல்லும் வயதில் இது போல பேருந்தில் செய்திருக்கிறேன் என்று கூறி அதிர்ச்சி அளித்தார்.. உடனே சமாளித்த் கமல் அப்படின்னா சரவணன் அதையும் தாண்டி புனிதமானவர் ஆகிவிட்டார் என கலாட்டாவாக கூறினார். சுற்றியிருந்த மற்ற போட்டியாளர்களும் அதை பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்களும் இதை கைதட்டி ரசித்தனர்.

இத்தனை பேருக்கும் ரொம்ப ஜாலியாகவே தெரிந்த இந்த விஷயத்தில் பாடகி சின்மயி மட்டும் கொதித்து எழுந்து உள்ளார். தமிழ் திரையுலகில் சமீபகாலத்தில் முதன்முதலாக பாலியல் குற்றச்சாட்டை பகிரங்கமாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்திய சின்மயி, இது தொடர்பாக வேறு எங்கு பாலியல் தொந்தரவுகள் நடைபெற்றாலும் தனது ட்விட்டர் பக்கத்தில் அதற்காக குரல் கொடுத்து வருகிறார். அந்த விதமாக இந்த நிகழ்ச்சியை நடத்தும் கமல், சரவணன் மற்றும் சக போட்டியாளர்கள், பார்வையாளர்கள் என அனைவருக்குமே கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார் சின்மயி.

இதுகுறித்து அவர் குறிப்பிட்டுள்ள பதிவில், 'ஒரு நபர் மாநகரப் பேருந்தில் பெண்களை உரசுவதற்காகவே சென்றேன் என கூறுகிறார்.. இதை ஒரு சேனல் ஒளிபரப்புகிறது.. இதற்கு பார்வையாளர்களிடமிருந்து கைதட்டல் கிடைக்கிறது.. பார்வையாளர்களுக்கு கைதட்டும் பெண்களுக்கு, இந்த செயலை செய்தவருக்கு எல்லாம் இது ஒரு ஜோக்.. டாமின்.. தினமும் லட்சக்கணக்கான சிறுமிகள் பேருந்தில் பாலியல் ரீதியாக துன்புறுத்தலை அனுபவித்து வருவது இவர்களுக்கெல்லாம் புரியவில்லையா..?” என காட்டமாக விமர்சித்துள்ளார்
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment