பாடசாலைக்குள் புகுந்த நபர், இராணுவத்தால் சுட்டுக் கொலை

மாத்தறை அக்மீமன பாடசாலைக்குள் அத்துமீறி நுழைய முயற்சித்த சந்தேக நபர் மீது இராணுவச் சிப்பாய் துப்பாக்கிப் பிரயோகம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று -04- இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 39 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அக்மீமன நானவில உபனந்த கனிஸ்ட பாடசாலையில் கற்றுவரும் தனது மகனை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக குறித்த நபர் பாடசாலைக்கு சென்றுள்ளார்.

எனினும் இராணுவச் சிப்பாயின் அறிவுறுத்தலை மீறி பலவந்தமான அவர் பாடசாலைக்குள் நுழைய முயற்சித்துள்ளார்.

இதன் காரணமாக இருவருக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது இராணுவச் சிப்பாயின் துப்பாக்கியைப் பறிக்க குறித்த நபர் முயற்சித்துள்ளார். இதனால் இந்த சூட்டுச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

சம்பவத்தில் காயமடைந்த சந்தேக நபர், கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சையின் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment