போலி ஐபோன் சார்ஜரை படுக்கையில் போட்டு வைத்தவருக்கு நிகழ்ந்த சோகம்

போலி ஐபோன் சார்ஜரை மின்சாரத்தில் இணைத்தபடி படுத்திருந்த பெண்ணின் செயின் சார்ஜரில் பட்டதில் அவரது கழுத்தின் சுற்றுப் பகுதி வெந்து போனது.
அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் சி.எஸ். மாட் குழந்தைகள் மருத்துவமனைக்கு கழுத்துப் பகுதியில் ஏரிச்சல் ஏற்படுவதாகக் கூறி சிகிச்சைக்கு வந்தார். அவர் கழுத்தில் அணிந்திருந்த நெக்லஸைக் கழற்றிப் பார்த்த போது, 2-ம் நிலை தீக்காயம் ஏற்பட்டதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
மேலும் அது மின்சாரத்தின் தாக்கத்தால் ஏற்பட்டது என மருத்துவர்கள் குறிப்பிட்டதை அடுத்து, பெண்ணிடம் நடத்திய விசாரணையில் சார்ஜரை ஆன் செய்துவிட்டு போனை அதில் இணைக்காமல் படுக்கையில் அப்படியே போட்டிருந்ததாக விளக்கம் அளித்தார். சார்ஜரின் மின்சாரத்தைக் கடத்தும் முனை பெண்ணின் உலோக நெக்லஸில் பட்டதால் இவ்வாறு ஏற்பட்டிருக்கக் கூடும் என கணித்துள்ளனர்.
ஐபோனின் அசல் சார்ஜர் உள்ள நிலையில் சிலர் தெரிந்தோ, தெரியாமலோ ஜெனரிக் எனப்படும் ஆப்பிள் நிறுவனமல்லாத போலி சார்ஜரை வாங்கிப் பயன்படுத்துவதாகவும், அவற்றில் 400 சார்ஜரில் பரிசோதனை மேற்கொண்டால் 3 மட்டுமே தேர்ச்சி பெற்று 99 சதவீதம் பாதுகாப்பில் தோல்வியடைவதாகக் கூறப்படுகிறது.
உண்மையான ஐபோன் சார்ஜரின் பின்களுக்கு இடையே பாதுகாப்புக் குறியீடு இருக்கும். பிளக்கின் அடிப்பாகத்தில் அடர் நிறத்தில் அல்லாமல் வெளிர் சாம்பல் நிறத்தில் குறியீடுகள் இருக்கும். பாதுகாப்பு அலாரம் என்ற வார்த்தை அச்சிட்டிருப்பதில் பிழை போன்றவற்றைக் கொண்டு போலி சார்ஜர்களை அடையாளம் காணலாம்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment