விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் டியர் காம்ரேட். இந்தபடம் திரைக்கு வருவதற்கு முன்பே, பாலிவுட் ரீமேக் உரிமையை வாங்கி விட்டார் கரண் ஜோஹர். அதையடுத்து இப்படத்தின் ஹிந்தி ரீமேக்கிலும் விஜய் தேவரகொண்டாவே நடிப்பதாக டோலிவுட்டில் ஒரு செய்தி பரவியது. ஆனால் இந்தி ரீமேக்கில் நான் நடிக்கவில்லை என்று ஒரு பேட்டியில் தெரிவித்துவிட்டார்.
இந்தநிலையில், டியர் காம்ரேட் படத்தின் ஹிந்தி பதிப்பில் நாயகியாக நடிக்க தன்னை அணுகியிருப்பதாக ஒரு செய்தி வெளியிட்டுள்ளார் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். அதோடு, அவர் இன்னொரு செய்தியும் வெளியிட்டுள்ளார். விஜய் தேவரகொண்டா எனக்கு பிடித்த நடிகர். அவரது பர்பாமென்ஸ் வித்தியாசமாக உள்ளது. அதனால் அவருடன் இணைந்து நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் ஜான்வி கபூர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment