தற்போது அட்லீ இயக்கத்தில் இரண்டு வேடங்களில் பிகில் என்கிற படத்தில் நடித்து வருகிறார் விஜய்.. இதையடுத்து விஜய் நடிக்கும் படத்தை மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக அல்லது வில்லன்களில் ஒருவராக தற்போது வளர்ந்து வரும் மலையாள இளம் ஹீரோவான ஆண்டனி வர்கீஸ் நடிக்க இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய அங்கமாலி டைரீஸ் என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி, தொடர்ந்து இளம் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் தான் இந்த ஆண்டனி வர்கீஸ்.. விஜய் படத்தின் வில்லனாக நடிப்பதன் மூலம் தமிழில் அவருக்கு நல்ல அறிமுகம் கிடைக்கும் என்பது உண்மை.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment