சாய் பல்லவிக்காக காத்திருக்கும் ராமகிருஷ்ணன்
உதவி இயக்குனராக இருக்கும்போதே ஹீரோ ஆகும் வாய்ப்பு கிடைத்து, குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே என்கிற படம் மூலம் கதாநாயகன் ஆனவர் தான் ராமகிருஷ்ணன்.. சேரனின் நீண்டநாள் உதவியாளரான இவர் போங்கடி நீங்களும் உங்க காதலும் என்கிற படத்தை இயக்கி நடித்தார்.
அதன் பிறகு படங்களில் நடிக்கவும் படம் இயக்கவும் வாய்ப்புக்காக சிரமப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குகொண்டு இருக்கும் தனது குருநாதர் சேரன் குறித்து சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்..
அதில், நடிகை சாய்பல்லவியை சந்தித்து ஒரு கதை சொன்னதாகவும் அந்த கதையை ஆர்வமாக கேட்ட சாய்பல்லவி இதை எத்தனை வருடமாக தயார் செய்தீர்கள் என்று ஆச்சரியப்பட்டதுடன் கேட்டதாகவும், நிச்சயம் இந்த கதையில் நடிக்கிறேன் என வாக்கு கொடுத்ததாகவும் கூறினார்.. தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறிய ஒரு மிகப்பெரிய நிறுவனம் தான் சாய்பல்லவியிடம் தன்னை கதை சொல்ல அனுப்பியதாகவும் கூறியுள்ளார் ராமகிருஷ்ணன்.
ஆனால், கதை பிடித்துப்போய் நடிப்பதாக சொன்ன சாய்பல்லவி அதன் பிறகு, கால்ஷீட் பிஸி காரணமாக இந்த படத்தில் நடிப்பதற்கு சம்மதம் சொல்ல தள்ளிப்போட்டுக் கொண்டு வருவதால் ஒருவேளை அவருக்கு இந்த கதை பிடிக்கவில்லையோ என தான் நினைப்பதாகவும் கூறியுள்ளார் ராமகிருஷ்ணன்.
0 comments:
Post a Comment