போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் மற்றும் அதற்கு வழங்கும் தலைமைத்துவம் என்பவற்றின் காரணமாக தனக்கு எதிராக பல்வேறு சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், உயிர் அச்சுறுத்தல்கள் கூட காணப்படுவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் நேற்று (02) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.
போதைக்கு எதிரான போராட்டத்தை முடக்குவதற்கு இன்று அதிகமானவர்கள் நீதிமன்றம் செல்வதாகவும், மனித உரிமைக்கான அமைப்புக்கள் போதைப் பொருள் கடத்தல் காரர்களுக்காக குரல்கொடுத்து வருவதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment