வைத்தியர் ஷாபிக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு

வைத்தியர் ஷாபிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
குறித்த வழக்கு இன்று குருநாகல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதன்போது தாய்மார்களின் முறைப்பாடுகள் குறித்து விஷேட வைத்தியர்களின் ஆலோசனைகளுடன் கூடிய அறிக்கை ஒன்று நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது.
இதேவேளை நேற்று பல்வேறு அமைப்புக்கள் ஒன்றிணைந்து வைத்தியர் ஷாபிக்கு எதிராக வைத்திய சபைக்கு முறைப்பாடு ஒன்றை முன்வைத்திருந்தனர்.
அனுமதியற்ற முறையில் வைத்தியர் ஷாபி 11 தாய்மார்களுக்கு எல்.ஆர்.டீ சத்திர சிகிச்சை செய்ததாக குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குருநாகல் போதனா வைத்தியசாலையில் சேவையாற்றிய வைத்தியர் ஷாபி, கடந்த மே மாதம் 24ஆம் திகதி இரவு பல குற்றச்சாட்டுக்களின் கீழ் கைதுசெய்யப்பட்டார்.
குறித்த மகப்பேற்று வைத்தியர் ஷாபி, சிசேரியன் சத்திர சிகிச்சை என்ற போர்வையில் சிங்களப் பெண்களுக்குக் கருத்தடை சத்திர சிகிச்சை செய்தார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
எனினும் அவருக்கு எதிராக ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment