குப்பைத்தொட்டியை இழுத்த கரடி வைரலான காணொளி

குப்பைகள் தேக்கி வைத்திருந்த குப்பைத்தொட்டியை கரடி ஒன்று தர தரவென இழுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, காண்போரை சிரிக்க வைத்துள்ளது.

இந்தச் சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில், இரவு ஆள்நடமாட்டம் இல்லாத நேரங்களில் கரடிகள் ஊருக்குள் நுழைந்து, குப்பைத் தொட்டியில் கொட்டப்படும் உணவு பதார்த்தங்களை ருசிபார்த்துச் செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், அண்மையில் கொலரடோவில், உணவுக்காக சுற்றித்திரிந்த கரடி ஒன்று, லையான்ஸ் டவுனில் இருந்த மருந்தகத்தின் பின்புறம் சென்று அங்கு பூட்டி வைக்கப்பட்டிருந்த குப்பைத்தொட்டியைத் திறக்க முற்பட்டுள்ளது.

அந்த முயற்சி தோற்றுப் போகவே, சாமார்த்தியமாக யோசித்த கரடி, அதனை அப்படியே அங்கிருந்து வனப்பகுதிக்குள் இழுத்து சென்றது. தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் வலைத் தளத்தில் வைரலாகி, பார்ப்போரை சிரிக்க வைத்துள்ளது.



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment