அனைத்து இன, மத மக்களும் சமத்துவத்துடன் வாழக்கூடிய நாட்டை உருவாக்கும் வகையில் புதிய அரசாங்கத்தில் அரசியலமைப்பை மாற்றம் செய்யப் போவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
புதிய அரசாங்கத்தில் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் முன்னின்று செயற்படும் . மேலும் எமது அடுத்த ஜனாதிபதியின் ஆட்சியின் கீழ் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment