சமீபத்தில் நடந்து முடிந்த உலகப்கோப்பை கிரிக்கெட்டில் போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டி டையில் முடிந்தது. அதனால் சூப்பர் ஓவர் முறை கையாளப்பட்டது. அதுவும் டையானது. இதையடுத்து அதிக பவுண்டரிகளை அடித்த இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனும் டுவிட்டரில் ஒரு கருத்து வெளியிட்டுள்ளார். ஒரு நபரிடம் 2000 ரூபாய் நோட்டு உள்ளது. ன்னொருவரிடமோ நான்கு 500 ரூபாய் நோட்டுகள் உள்ளன. இந்த நான்கு 500 ரூபாய் நோட்டு வைத்திருப்பவரிடம் நான்கு ஐந்துகளும், 8 ஜீரோக்களும் உள்ளன. ஒரு 2 ஆயிரம் ரூபாய் வைத்திருப்பவரிடம் ஒரு 2 மற்றும் மூன்று ஜீரோக்கள் மட்டுமே உள்ளன.
அதன்காரணமாக நான்கு 500 ரூபாய் நோட்டுக்களை வைத்திருப்பவரையே பணக்காரர் என்று ஐசிசி முடிவு செய்துள்ளது என்று இங்கிலாந்துக்கு கோப்பை வழங்கப்பட்டதை கிண்டலாக பதிவிட்டுள்ளார் அமிதாப்பச்சன்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment