ரயில்வே ஊழியர்கள் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பு

ரயில்வே ஊழியர்கள் மீண்டும் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் நேற்று நள்ளிரவு ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று   தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஊழியர் ஒருவர் குறித்து ரயில்வே பொது முகாமையாளர் மேற்கொண்ட ஒழுக்காற்று நடவடிக்கையைத் தடுப்பதற்கு, போக்குவரத்து அமைச்சின் செயலாளர் அழுத்தம் பிரயோகிப்பதாகத் தெரிவித்தே இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று காலை எந்தவொரு ரயிலும் சேவையில் ஈடுபடாமையினால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோவிற்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் இந்த பேச்சுவார்த்தை இன்று பகல் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து ரயில் ஊழியர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் நள்ளிரவு 12 மணி முதல் 24 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment