விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வழமையாக வார நாட்களில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டமே இவ்வாறு நேற்று கூட்டப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
ஜனாதிபதி வார நாட்களில் மேற்கொள்ளவுள்ள வெளிநாட்டு விஜயம் காரணமாக இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
சனிக்கிழமை இந்தக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால், இக்கூட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே கலந்துகொண்டுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
0 comments:
Post a Comment