இலங்கை பாதுகாப்புத்துறை பலத்த அதிருப்தியில்

நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் நடவடிக்கையில் இலங்கை பாதுகாப்புத்துறை பலத்த அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகின்றது  தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக தெரிவுக்குழு நடந்து கொள்வதாகவும், புலனாய்வு பிரதானிகளை ஆபத்தில் சிக்க வைக்கும் விதமாக தெரிவுக்குழு நடந்து கொள்வதாகவும் பாதுகாப்புத்துறை விசனம் வெளியிட்டுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது   இந்நிலையில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன்பாக சாட்சியமளிக்கும்படி அரச புலனாய்வுத்துறையின் பிரதானி டிஐஜி நிலந்த ஜயவர்த்தன அழைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே தெரிவுக்குழுவிற்கு அவர் அழக்கபட்டிருந்தபோதும் , ஜனாதிபதியின் விசேட உத்தரவிற்கமைய அவர் முன்னிலையாகவில்லை. இந்நிலையில் தற்போது பிரித்தானியாவில் தங்கியிருக்கும் ஜனாதிபதி, தான் திரும்பி வரும் வரையிலும் தெரிவுக்குழுவில் முன்னிலையாக வேண்டாமென அரச புலனாய்வுத்துறையின் பிரதானிக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

  அவரை வரும் 24ம் திகதி முன்னிலையாகும்படி அழைப்பு விடுத்துள்ள தெரிவுக்குழு , அவரை மாத்திரமன்றி, பயங்கரவாத, குற்றப்புலனாய்வு பிரிவு பிரதானிகளும் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை அரச புலனாய்வுத்துறை பிரதானி டிஐஜி நிலந்த ஜயவர்த்தனவின் புகைப்படங்கள் எதுவும் இதுவரை பகிரங்கமாக பகிரப்பட்டிருக்கவில்லை. இரகசிய புலனாய்வு சேவையின் பிரதானிகளின் விபரங்கள் பகிரங்கப்படுத்தப்படுவதில்லையென்ற அத்தியாவசிய நடைமுறையின் அடிப்படையில் அவரது விபரங்கள் இரகசியமாக பேணப்பட்டிருந்த நிலையில், நிலந்தவின் வாக்குமூலங்கள் ஊடகங்களின் முன் பகிரங்கப்படுத்தப்படும் என தெரிவுக்குழு அறிவிப்பு விடுத்துள்ளது. இதன் காரணமாக இரகசிய புலனாய்வு சேவை பிரதானிகளின் விபரங்களை தெரிவுக்குழு பகிரங்கப்படுத்துவதாக, கடும் அதிருப்தியில் உள்ள பாதுகாப்பு தரப்பு, இது குறித்து ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் அவர்கள் முறையிடவும் தீர்மானித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment